Type Here to Get Search Results !

யார் இந்த பாலசரஸ்வதி? - About balasaraswathi in tamil

0

பாலசரஸ்வதி - About balasaraswathi in tamil


Bala saraswathi biography in tamil - தமிழகத்தில் ஒரு காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட கலைக்கு இந்திய அரங்கு உலக அரங்கிலும் மதிப்பை பெற்றுத் தந்தவர்.


மற்றும் தமிழகத்தின் பெருமைக்குரிய கலைகளில் ஒன்றாக செவ்வியல் நடன திகழக் காரணமானவர் ஆவார் பாலசரஸ்வதி.


இவருக்கு ஏழு வயதாக இருக்கும்பொழுது காஞ்சிபுரத்தில் பரதநாட்டிய அரங்கேற்றம் அதற்காக முதல் முதலில் மேடை ஏறினார்.


15 வயதில் சென்னையில் உள்ள சங்கீத சமாஜம் என்னும் அரங்கில் நடன நிகழ்ச்சி நடந்தது அதில் பாலசரஸ்வதி நடனத்தை பார்த்த பிறகே மரபுசார் நாட்டியத்தை பலரும் தீவிரமாக வரவேற்ற தொடங்கினர்.


சென்னையில் பால சரஸ்வதியின் நாட்டிய கச்சேரியை பார்த்த பண்டிட் ரவிசங்கர் அவர்கள் மிகவும் பாராட்டினார். அவரது தம்பியின் மூலமாக வட இந்தியாவின் பல இடங்களில் நடனமாடும் வாய்ப்பு பாலசரஸ்வதி அவர்களுக்கு கிடைத்தது.


கல்கத்தாவிலும், காசியில் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டின் பண்ணாகிய ஜனகணமன பாடலுக்கு மெய்ப்பாடுகலோடு ஆடியவர் ஆவார்.


நாட்டுப் பெண்ணுக்கு நடனமாடியது அதுவே முதலும் இறுதியும் ஆகும்.


ஐரோப்பா அமெரிக்கா முதலிய நாடுகளிலும் நடன நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.


டோக்கியோவில் உள்ள கிழக்கு மேற்கு சந்திப்பு நிகழ்வு இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடினார். இந்நிகழ்வு பரதநாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்றுத்தந்தது.


பரதநாட்டியக் கலையை முறையாக அணுகினால் ஆன்மீக பட்டறிவை நடனத்தால் வழங்க முடியும் இதனை பாலசரஸ்வதி உணர்ந்து உலகிற்கும் உணர்த்தி உள்ளார்.


தமிழகத்தில் ஒரு காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட கலைக்கு இந்திய அரங்கு உலக அரங்கிலும் மதிப்பை பெற்றுத் தந்தவர்.


தமிழகத்தின் பெருமைக்குரிய கலைகளில் ஒன்றாக செவ்வியல் நடன திகழக் காரணமானவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்