About thappattam in tamil | தப்பு ஆட்டம்

 தப்பு ஆட்டம் பற்றிய குறிப்பு

Thappattam - தப்பு என்ற தோற்கருவியை இசைத்துக் கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்வுகளையே தப்பாட்டம் ஆகும்.

About thappattam in tamil

ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த தப்பு ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆளப்படுகின்றது. இந்த ஆட்டத்தை தப்பாட்டம், தப்பட்டை, தப்பு என்றும் அழைக்கின்றனர்.


தப்பு என்பது வட்ட வடிவமான அமைந்துள்ள அகன்ற தோற்கருவி. கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம், விளம்பர நிகழ்ச்சி ஆகியவற்றில் இந்த தப்பாட்டம் ஆடப்படுகின்றது.


தப் தப் என்று ஒலிப்பதால் அந்த ஒளியின் அடியாக தப்பு எனப் பெயர் பெற்றது என கூறப்படுகின்றது.


தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக

-திருப்புகழ்


என்று அருணகிரிநாதர் தப்பாட்ட இசை குறித்து பதிவு செய்துள்ளார். இதனை பறை என்றும் அழைப்பர்.


ஒன்றைக் சொல்வதற்கு ஏற்ற பறைதல் இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக் கருவி பறை. தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாக இடம் பெறுகிறது. மேலும், பறையாடல் பற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.


தப்பாட்டம் நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப அதன் இசை அமைப்பு முறைகளும் ஆட்ட முறைகளும் வேறுபடுகின்றன.


வட்டமாக ஆடுதல் இரண்டு வரிசையாக எதிரெதிர் திசையில் நின்று ஆடுதல் அனைவரும் நேர் வரிசையில் நின்று ஆடுதல் குதித்து குதித்து ஆடுதல் உட்கார்ந்து எழுதல் நடை ஆட்டம் ஆகிய கூறுகளை இன்றைய கலைஞர்களிடம் காணமுடிகின்றது. தப்பாட்டத்தில் கலைஞர்கள் குழுவாக தான் பங்கேற்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post