₹10 கோடி அபராதம் செலுத்தினார் சசிகலா

₹10 கோடி அபராதம் செலுத்தினார் சசிகலா


சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றம் சசிகலாவுக்கு விதித்த அபராதத் தொகை ரூபாய் 10 கோடியே 10 லட்சத்துக்கான வங்கி வரையிலான பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.


sasikala news today tamil


தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 1997ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை இருந்தபோது, ரூபாய் 66.65 கோடி வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இதில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, இரண்டாவது குற்றவாளியாக சசிகலா, மூன்றாவது குற்றவாளியாக வி.என்.சுதாகரன், நாலாவது குற்றவாளியாக இளவரசி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சுமார் 10 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த விசாரணை முடிந்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா உட்பட 4 பேரையும் குற்றவாளியாக உறுதி செய்ததுடன்  பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் முதல் குற்றவாளியாக ஜெயலலிதாவுக்கு ரூபாய் 100 கோடியும் மற்ற 3 பேருக்கும் தலா ரூபாய் 10 கோடியே 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார் நீதிபதி.


தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.


அதில் ஜெயலலிதா உட்பட 4 பேரையும் குற்றவாளிகள் இல்லை என கூறி நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார் இதை எதிர்த்து கர்நாடக மாநில அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது அம்மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் 4 பேரையும் விடுதலை செய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததுடன் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.


அதைத்தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சசிகலா, மூன்றாவது குற்றவாளியான சுதாகரன், நாலாவது குற்றவாளியான இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.


கடந்த 44 மாதங்களாக சிறையில் உள்ள குற்றவாளிகளின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிகிறது. இதனிடையில் சசிகலா விடுதலை தொடர்பாக ஆர்டிஜ சட்டத்தில் சமூக ஆர்வலர் விண்ணப்பித்திருந்த கேள்விக்கு பதில் அளித்தருந்த சிறை கண்காணிப்பாளர்  2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தார்.


இதனிடையில் சிறையில் தண்டனை அனுபவித்து மூன்றும் நீதிமன்றம் விதித்திருந்த அபராத தொகையை செலுத்தாமல் இருந்தனர். இந்நிலையில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூபாய் 10 கோடியே 10 லட்சம் அபராதம் தொகைக்கான வங்கி வரைவோலை (DDI) பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் நேற்று மாலை வக்கீல் சீ.முத்துக்குமார் செலுத்தினார்.அவருடன் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டி உடனிருந்தார்.


சசிகலா தரப்பில் எழுந்தே செலுத்தப்பட்ட 10 கோடியே 10 லட்சத்து அபராத தொகைகான வரையோலையை நீதிபதி பெற்றுக்கொண்டார்.

Post a Comment

Previous Post Next Post