About poikkal kuthirai attam in tamil | பொய்க்கால் குதிரை

 பொய்க்கால் குதிரை ஆட்டம் பற்றிய குறிப்பு

போலச்செய்தல் பண்புகளை பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்று. மரத்திலான பொய் காலில் நின்று கொண்டும் குதிரைவண்டி உள்ள கூட்டை உடம்பில் சுமந்து கொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும்.


About poikkal kuthirai attam in tamil


அரசன் அரசு வேடமிட்டு ஆடப்படும் இந்த பொய்க்கால் குதிரை ஆட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கூறப்படுகின்றது.


கலைஞர்கள் தங்கள் கால்களை மறைக்கும் உயரத்திற்கு துணியை கட்டிக் கொள்கின்றனர். காலில் சலங்கை அணிந்து, அரசன் அரசி உடை அணிந்து, கிரீடம் அணிந்து ஆடுகின்றனர்.


குதிரை மேல் ஏறி பயணம் செய்வது போன்றும், கடிவாளத்தை ஆடியும் உயர்த்தியும், நான்கு புறமும் ஓடியும் ஆடுகின்றனர். இந்த பொய்க்கால் குதிரை ஆட்டத்தை ராஜஸ்தானில் கக்சிகொடி என்றும் கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகின்றது.


பொய்க்கால் குதிரை ஆட்டத்திற்கு பாடல்கள் பயன்படுத்தப் படுவதில்லை. நையாண்டி மேளமும், நாதஸ்வரமும் இசைக்கப்படுகின்றன.

Post a Comment

Previous Post Next Post