Madan Gowri biography in tamil - மதன் கவுரி...

தமிழ்நாட்டின் முன்னணி பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் Madan Gowri அவரின் வாழ்க்கை கதை (mg biography), சமூக வலைத்தளம் (social media), இவர் எப்பொழுது யூடியூப் ஆரம்பித்தார்? என அவரைப் பற்றி அனைத்தையும் இந்த பதிவில் பார்ப்போம்.

Madan Gowri biography in tamil

Madan Gowri full biography in tamil


பெயர் : மதன் கவுரி

வயது : 27

பிறந்த தேதி : 23 மே 1993 ஆம் ஆண்டு

பிறந்த இடம் : தூத்துக்குடி, தமிழ்நாடு

பணி : யூடியூப் (YouTuber)

யூடியூப் பயணம் : டிசம்பர் 5ஆம் தேதி 2002 ஆம் ஆண்டு

பிறப்பு


மதன் கவுரி 23 மே 1993 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தார். இவர் இந்தியாவில் மிகவும் அதி விரைவாக வளர்ச்சி அடையும் யூடியூபர்களில் மதன் கவுரியும் ஒருவர். இவர் வயது 27 ஆகும். இவர் ஒரு சாதாரண இளைஞன்.

Madan Gowri யூடியூப் பயணம்


மதன் அவர்களுக்கு சிறு வயதிலிருந்தே பேசுவதற்கு மிகவும் ஆர்வம் இருக்கும், அதனால் இவர் யூட்யூபில் ஒரு கணக்கு தொடங்கினார். மதன் கவுரி முதல்முதலில் டிசம்பர் 5ஆம் தேதி 2002 ஆம் ஆண்டு தனது YouTube பயணத்தை ஆரம்பித்தார்.

மதன் கவுரி அவ்வப்போது அவருக்குத் தெரிந்ததை பேசிக் கொண்டு இருந்தார். ஒருநாள் இவர் வீடியோவில் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார், ஏன் நேற்று நீங்கள் வீடியோ போடவில்லை? என்று, இதனை மதன் கவுரி பார்த்தவுடன் இவருக்கு தனது வீடியோவை ஏதோ ஒரு பையன் பார்க்கிறான் அவனுக்காக நான் வீடியோ போட வேண்டுமென்று எண்ணி வீடியோ போட தொடங்கினார்.

மதன் அப்பொழுது தொடங்கிய தொடக்கம்தான் இன்றளவும் நிற்காமல் கோடிக்கணக்கான ரசிகர்களையும் சப்ஸ்கிரைப்களையும் பெற்றுள்ளார். 

மதன் கவுரி அன்றாட வாழ்வில் நடக்கும் சிக்கல்களை மற்றும் சமூகத்தில் நடக்கும் அவலங்களை மற்றும் இவருக்கு தெரிந்தவற்றை நமக்கு கூறுவதற்கும் இவர் நமது தாய்மொழியில் யூடியூப் ஒன்று ஆரம்பித்து இப்பொழுது இவர் தமிழ்நாட்டின் முன்னணி யூடியூபேர்களி்ள் இவரும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Madan Gowri அவர்கள் யூடியூபில் வீடியோ அப்லோட் செய்தால் மட்டும் போதும் அதுவே தானாக வைரல் ஆகிவிடும், ஏனெனில் அவருக்கு யூட்யூபில் இருக்கும் ரசிகர் கூட்டம் ஏராளம்.

சமூக வலைத்தளம் (social media)


Youtube : MG YouTube page
Instagram : MG instagram page
Twitter : MG Twitter page
Facebook : MG Facebook page

Madan Gowri salary - வருமானம்


யூடியூப் நிறுவனமானது ஆயிரம் பார்வையாளர்களுக்கு ஒன்றிலிருந்து இரண்டு டாலர் வரை பணம் கொடுக்கின்றனர்.
இதன் கணக்கு அடிப்படையில் மதன் கவுரி அவர்கள் யூடியூபில் இருந்து ஒரு மாதத்திற்கு சுமார் 7.2k - 8.5 k வரை சம்பாதிக்கிறார் ஒரு வருடத்திற்கு சுமார் $87,700 - $1.4 மில்லியன் டாலர் வரை சம்பாதிக்கிறார்.

Madan Gowri Married or unmarried?


மதன் கௌரி அவர்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? இல்லையா? இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
மதன் கௌரி அவர்களிடம் அவர்கள் சப்ஸ்கிரிபர் எப்பொழுது மதன் கௌரி கல்யாணம் பண்ணிக் கொள்வார்? என்றும் உங்கள் கல்யாணத்திற்கு எங்களை அழைப்பீர்களா என்று கேள்வி தான் அதிக கேட்கப்படும்.

Madan தனது ஒரு வீடியோவில் அவரின் கல்யாணம் தனது யூட்யூபில் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரீம் ( live stream ) பண்ணப் படும் என்று கூறியுள்ளார்.

Conclusion


இப்பொழுது மதன் கவுரி பார்த்துவிட்டு பல தமிழ் இளைஞர்கள் யூடியூபில் வீடியோ பதிவு செய்தால் எப்படியாவது நம் திறமை வெளிவர யூடியூப் பயன்படும் என்று நினைத்து அவர்களுக்கு தெரிந்தவற்றை யூடியூபில் வீடியோவாக பதிவு செய்கிறார்கள்.

Madan Gowri அவர்கள் தனக்கு பிடித்தவற்றை செய்ததனால் அவர் வெற்றி கண்டார் அதேபோல் நாமும் நமக்கு பிடித்தவற்றை விடாமுயற்சியுடன் செய்துகொண்டிருந்தால் ஒருநாள் அல்லது ஒருநாள் வெற்றியடைவோம் என்பதற்கு மதன் கவுரி ஒரு எடுத்து காட்டு என்பதை மனதில் வைத்துக்கொண்டு முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்! முன்னேறிக் கொண்டே இருங்கள்! என்று உங்களை வாழ்த்துகிறேன்.

Post a Comment

Previous Post Next Post