M.G.Ramachandran life history in tamil - எம்.ஜி.ஆர்...

 எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய சிறு குறிப்புகள்

  • பெயர் : எம்.ஜி.ராமச்சந்திரன்.
  • பிறப்பு : 1917 ஆம் ஆண்டு,  ஜனவரி 14 ஆம் தேதி.
  • இறப்பு : 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி.
  • பணி : அரசியல்வாதி, எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர்.
  • தோன்றிய கழகம் : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.


mg ramachandran life history in tamil

M.G.Ramachandran life history in tamil

பிறப்பு

எம் ஜி ராமச்சந்திரன் இலங்கையிலுள்ள கண்டி என்ற ஊரில் 1917 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி பிறந்தார். இவர் கோபாலமேனன், சத்யபாமா தம்பதியினருக்கு ஐந்தாவது மகனாக பிறந்தார்.


இவரது இரண்டாவது வயதில் தந்தை காலமானார். அதன் பின்பு வறுமை காரணமாக இவர்களின் குடும்பம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் நகருக்கு குடிபெயர்ந்தது.


கல்வி

எம். ஜி. ஆரின் அன்னை சத்யபாமா அங்குள்ள மனையடி பள்ளியில் தன் மகள் சக்கரபாணியும், எம். ஜி. ஆரையும் சேர்த்தார்.


ஆனால் தனது குடும்ப வறுமையினால் இருவரும் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை.


கலைத்துறை

எதிர்பாராதவிதமாக இருவருக்கும் நாடகத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


தனது இளமைப் பருவத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்ஜிஆர் அவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டு சிறு சிறு பாத்திரங்களில் நடித்து கதாநாயகனாக உயர்ந்தார்.


அவரது சுறுசுறுப்பு முறை படிப்படியாக அவரை உயர்நிலைக்கு கொண்டு சென்றன.


அரசியல் பாதை

எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பு கலையையும் அரசியலும் தனது இரு கண்களாக கருதினார்.


அறிஞர் அண்ணாவின் பேச்சுத் திறமையைக் மற்றும் அவரின் குணம் முதலியவற்றால் எம்.ஜி. ராமச்சந்திரன் கவரப்பட்டார்.


இவர் நடித்த திரைப்படங்களில் வாயிலாக நல்ல பல கருத்துக்களையும் மக்களை சென்றடைய பெரும் முயற்சி எடுத்தார் எம்.ஜி.ஆர்.


இதன் காரணமாக மக்கள் அவரை புரட்சி நடிகர் என்றும் மக்கள் திலகம் என்றும் போற்றினார்கள் அறிஞர் அண்ணாவின் நெஞ்சம் கவர்ந்த எம்ஜிஆர் விளங்கிய அதனால் அவரை அறிஞர் அண்ணா இதயக்கனி என்றும் போற்றினார்.


 ராமச்சந்திரன் நடிப்பு துறையில் மட்டும் இந்திய அரசியலில் ஈடுபட தொடங்கினார் இவர் 1963 ஆம் ஆண்டு சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினரானார்.


1967 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராமச்சந்திரன்.


1972 ஆம் ஆண்டில் தாம் இருந்த திராவிட இயக்கத்தில் இருந்து சிறிது கருத்து வேறுபாடு காரணமாக விலகி புது கட்சியை தொடங்கினார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றார்.


பதினோராம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல்வராக பணியாற்றினார்.


விருதுகள்

சென்னை பல்கலைக்கழகம் எம்ஜிஆரின் பணிகளை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது இந்திய அரசின் சிறந்த நடிகருக்கான பாரத் பட்டத்தை வழங்கி அவருக்கு சிறப்பு செய்தது.


எம் ஜி ராமச்சந்திரன் பணியை பாராட்டி இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இந்திய மாமணி 1988 ஆம் ஆண்டு அவருடைய மறைவுக்குப்பின் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.


சத்துணவு வழங்கும் திட்டம்

எம் ஜி ராமச்சந்திரன் வறுமை பசிக்கொடுமை ஆகிய இரண்டினையும் இளமையிலேயே உணர்ந்தார்.


அதனால் அவர் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அறிமுகப்படுத்திய மதிய உணவு திட்டத்தை தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சத்துணவு வழங்கும் திட்டமாக செயல்படுத்தினார்.


இறப்பு

புரட்சித்தலைவர் என்று மக்களால் போற்றப் போற்றப்படும் எம் ஜி ராமச்சந்திரன் 24.12.1987 ஆம் ஆண்டு அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்.


எம் ஜி ராமச்சந்திரன் அவர்களது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டு அவர் காண நினைவகம் மெரினா கடற்கரையிலேயே அமைக்கப்பட்டது.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத்தளத்தில் பகிருங்கள்.

Post a Comment

Previous Post Next Post