ஒயிலாட்டம் என்றால் என்ன?
ஒரே நிறத் துணியை முண்டாசு போல அணிந்தும் காலில் சலங்கை அணிந்து கையில் வைத்துள்ள சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் ஆட்டமே ஒயிலாட்டம் எனப்படும்.
உணர்ச்சிக்கு ஏற்ப பாட்டின் சந்தமும் சந்தத்திற்கு ஏற்ப ஆட்டத்தின் இசையும் மாறி மாறி, மனதை ஈர்க்கும் இதில் கம்பீரத்துடன் ஆடுதல் என்பது தனிச்சிறப்புடையது.
ஒயில் ஆட்டத்தை இரு வரிசையாக நின்று ஆடுகின்றனர் ஒருவர் ஒருவரிடம் விட்டு விலகி நின்று ஆடும் இந்த ஆட்டத்தை பெரும்பாலும் ஆண்கள் ஆடுவதே வழக்கில் உள்ளது.
ஒரே குழுவில் வயது முகுந்தவர்களும் இளைஞர்களும் இணைந்து ஆடுவதும் உண்டு.
ஒயிலாட்டத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள்
ஒயிலாட்ட த்தில் தோலால் கட்டப்பட்ட குடம், தாவில், சிங்கி, டோலாக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் தமிழ் கலைகளைப் பற்றி அறிய,
தப்பாட்டம் (thapattam in tamil)