Benefits of walnuts in tamil - இந்தப் பதிவில் வால்நட்டை சாப்பிடும் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்க போகிறோம்.
9 Benefits of walnut in tamil
வால்நட் பயன்கள்
இதய நோயை தடுக்கின்றது
வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் உங்கள் இதயநோய் தடுக்கப்படுகிறது.
ஏனெனில் நீங்கள் தினமும் வால்நெட் சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவும் குறையும் மற்றும் நல்ல கொழுப்பின் அளவை சீராக பராமரிக்கும்.
அதனால் உங்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் தடுக்கப்படுகிறது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது
சர்க்கரை நோய் கட்டுப்படுத்தவும் இந்த வால்நட் உதவுகிறது நீங்கள் தினமும் வால்நட்டை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர உங்கள் சர்க்கரை நோய் குறையும்.
அதிலும் குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோயை குறைக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோயை தடுக்கிறது
நீங்கள் தினமும் இந்த வால்நட்டை சாப்பிட்டுவர உங்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
இந்த வால்நட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் புற்றுநோய் செல் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
அதனால் நீங்கள் புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமென்றால் இந்த வால்நட்டை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வாருங்கள்.
மனம் அழுத்தம் குறைகிறது
மனம் அழுத்தம் மற்றும் பதற்றத்தை போக்கவும் இந்த வால்நட் உதவுகிறது. இந்த வால்நட்டில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மூலம் உங்கள் மன அழுத்தம், கவலை போன்றவற்றை மறக்க உதவுகிறது மற்றும் பதட்டத்தை போக்க முடிகிறது.
மெட்டாபாலிசம் மேம்படுகிறது
நீங்கள் தினமும் இந்த வால்நட்டை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர உங்கள் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது.
வால்நட்டில் பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளதால் உங்கள் மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது.
உடல் எடை குறையும்
வால்நட்டில் அதிகமாக நல்ல கொழுப்பு சத்துக்கள் இருக்கிறது இது உங்களது கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும் மற்றும் உங்கள் பசி தன்மையினை குறைக்கும்.
இந்த வால்நட் நீங்கள் தினமும் உண்டுவர உங்கள் உடல் எடை குறைய உதவுகிறது.
அதனால் நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் நீங்கள் தினமும் தண்ணீரில் வால்நட்டை ஊற வைத்து சாப்பிடும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.
தூக்கம் மேம்படும்
வால்நட்டில் மெலடோனின் என்ற சொல்லப்படுகிற ஒரு அமிலம் இருக்கிறது அதன் மூலம் உங்கள் தூக்கம் மேம்படவும் உதவுகிறது.
உங்களுக்கு நல்ல தூக்கம் வர வேண்டுமென்றால் கால்நடை தினமும் சாப்பிட்டு வாருங்கள்.
எலும்புகள் வலுப்பெறும்
நீங்கள் தினமும் வால்நட்டை சாப்பிட்டு வந்தால் உங்கள் எலும்பு மற்றும் பற்கள் வலிமை அடையும்.
ஏனெனில் வால்நட்டில் ஆல்ஃபாஐலமிக் அமிலம் இருக்கிறது அதன் மூலம் உங்கள் பற்களுக்கு மற்றும் எறும்புகளுக்கும் தேவைப்படும் வலிமையை அளிக்கிறது.
மூளை செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கும்
வால்நட்ஸ் மூளையின் செயல்பாட்டையும் மற்றும் பராமரிக்கவும் உதவுகிறது.
ஏனெனில் வால்நட்டில் ஒமேகா-3 அமிலம் இருக்கிறது அதன் மூலம் உங்கள் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்கிறது.
நீங்கள் தினமும் இந்த வால்நட்டை சாப்பிட்டு வர உங்கள் மூளை செயல்பாடு அதிகரிக்கும்.
முடிவுரை - conclusion
இந்த Benefits of walnut in tamil பதிவு உங்களுக்கு பிடித்து இருக்கும் மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி....