Type Here to Get Search Results !

True inspiration story in tamil with moral

1

 இந்த பதிவில் நாம் உண்மையான inspirational story tamil இல் பார்க்கப் போகிறோம். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள தன்னம்பிக்கை கதை முற்றிலும் உண்மை கதை ஆகும்.


 அதனால் இந்த தன்னம்பிக்கை கதையை யாராலும் கற்பனை கதை என்றே நினைக்க வேண்டாம். இந்த inspiration story (தேடல் ஒரு லட்சியம்) பதிவை தொடர்ந்து படியுங்கள் கண்டிப்பாக உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.


Inspiration story in tamil

தேடல் ஒரு லட்சியம்


ஒரு ஊரில் ஒரு பொறியாளர் இருந்தார் அவர் ராணுவத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம் இருந்தது மற்றும் விவசாயத்தின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்புடன் இருந்தார்.


இவர் நாட்டில் ஒரு பகுதி மட்டும் நல்ல செழிப்பாக தட்பவெட்ப நிலை மற்றும் தண்ணீர் உடையதாக இருந்தது. ஆனால் இவர் வாழும் பகுதி மட்டும் தண்ணீர் இல்லாமல் வறண்ட விவசாயம் செய்ய முடியாத பகுதியாக இருந்தது.


இவரோ ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் அதனால் இவர்கள் ஊரில் உள்ள காலி நிலங்களை பார்த்தவுடன் இவருக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. அதனால் தான் படித்த படிப்பை வைத்து இதற்கு ஏதாவது தீர்வு கண்டுபிடிக்க வேண்டுமென்று எண்ணினார்.


ஆனால் அப்பொழுது இவர் வாழ்ந்த நாட்டிற்கு நாட்டின் ராணுவத்திற்கு பொறியாளர்கள் தேவைப்பட்டனர் அதனால் அதில் பணிபுரிந்து கொண்டு இருந்தார். அப்பொழுது இவர் நாட்டு அரசாங்கம் ஒரு ஆராய்ச்சி ஒன்றை தொடங்கியது அது என்னவென்றால் வறண்ட பகுதியில் எப்படி விவசாயம் செய்ய முடியும் என்பது தான் அந்த ஆராய்ச்சி.


அந்த ஆராய்ச்சியில் இவரும் பங்காற்றினார்.


முதலில் அந்த வறண்ட நிலை பகுதிக்கு ஒரு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து காலைவேளையில் பயிர்களுக்கு தண்ணீரை பாய்ச்சினார்கள் ஆனால் அந்நாட்டின் அடிக்கும் வெயிலின் காரணமாக உடனடியாக அந்த தண்ணீர் பயிர்களின் வேர்களுக்கு செல்வதற்குமுன் வறண்டு போய்க் கொண்டே இருந்தது.


சரி பகல் வேளையில் தான் இப்படி தண்ணீர் வரண்டு போவது என்று இவர் இரவு வேளையில் தண்ணீர் எடுத்துவந்து பயிர்களுக்கு ஊற்றினார். ஆனாலும் இரவு வேலைகளில் இருக்கும் தண்ணீர், காலையில் அடிக்கும் வெயிலினால் பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு போய்விடுகிறது அதனால் இந்த முயற்சியும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை.


வறண்ட நிலப் பகுதிக்கு தண்ணீர் கொண்டுவருவது சிரமம் அதன் மீதும் கொண்டுவந்து பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றினால் அது வீணாகி விடுகிறது என்று அவர் கவலையாய் இருந்தார்.


ஆனாலும் அவர் தனது மனசை தளர விடாமல் ஒவ்வொரு முயற்சியாக செய்து கொண்டிருந்தார். இவர் ஒவ்வொரு முறையும் முயற்சியில் தோல்வி அடையும் பொழுது அந்த தோல்விக்கான காரணத்தை தேடிக்கொண்டிருந்தார்.


இவர் இப்படியே செய்து கொண்டிருக்கும் பொழுது, ஒருநாள் இவர் வேலை செய்து கொண்டு இருக்கும் இடத்திற்கு பின் ஒரு மரத்தை பார்க்கிறார்.

அந்த மரம் அத்தி மரம் அந்த மரமானது நன்கு செழிப்பாக வளர்ந்து நிற்கின்றது. ஆனால் அந்த மரத்தின் நிலப்பகுதியானது எப்பொழுதும் இருக்கும்படி காய்ந்து போய் இருக்கிறது. இவர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த பொழுது இந்த மரத்திற்கு யாரும் தண்ணீர் கூட விடவில்லை என்று தெரியவந்தது.


இவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது இந்த மரம் மட்டும் எப்படி மிக செழிப்பாக வளர்ந்தது ஆனால் யாரும் தண்ணீர் ஊற்ற வில்லை எப்படி வளர்ந்தது என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது.


அந்த பொரியாலன் கிராமத்து மக்கள் அனைவரையும் கூட்டி இந்த கேள்வியை எழுப்பினார் அதற்கு அந்த கிராமத்து மக்கள் இந்த மரம் ஒரு அதிசய மரம் இந்த அத்தி மரம் எப்படி வளர்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை என்று அனைவரும் கூறினர்.


ஆனால் இந்த பொறியாளர் இந்த மரம் ஒரு அதிசய மரம் என்று நம்பவில்லை இதற்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று ஆணித்தரமாக இருந்தால் இவர் தினமும் தனது வேலைக்கு செல்வதற்கு முன் இந்த மரத்தை ஒரு நிமிடம் சென்று பார்த்து விட்டு தான் செல்வார்.


ஒருநாள் இந்தப் பொறியாளர் அந்த மரத்தை பார்க்கும் செல்லும் பொழுது அந்த மரத்திற்கு கீழ் ஒருவர் சிறிது பள்ளம் தோண்டி கொண்டிருந்தார் அப்போது இந்த பொறியாளர் அருகில் சென்று பார்க்கும் பொழுது அந்த மரத்தில் ஒரு நீர்க்குழாய் இருக்கிறது என்று தெரிந்துகொண்டார். அந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதிலிருந்து கசியும் நீர் நேரடியாக இந்த மரத்தின் வேருக்கு செல்கிறது அதனால்தான் இந்த மரம் மிக செழிப்பாக வளர்ந்து உள்ளது என்பதை இந்த பொறியாளர் கண்டுபிடித்தார்.


இதனை இந்த பொறியாளர் பார்த்தவுடன் இவருக்கு ஒரு யோசனை வந்தது இந்த முறையை நாம் நம் பயிர்களுக்கும் கையாண்டால் கண்டிப்பாக விவசாயம் பண்ண முடியும் என்பதை நம்பினார்.


இவர் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, மிகவும் நேர்த்தியான முறையாக இந்த முறையை அறிமுகம் செய்தார் இந்த பொறியாளர்.


இந்த பொறியாளரின் பெயர் சிம்சா பிளஸ் இவர் கண்டுபிடித்த முறை சொட்டு நீர் பாசனம் ஆகும்.


இன்றளவும் இந்த முறையை மிக வரட்சியான மற்றும் தண்ணீர் குறைவாக கிடைக்கும் இடத்தில் இந்த சொட்டு நீர் பாசனம் முறையானது பயன்படுத்தப்படுகிறது இதற்கு முழுக்க முழுக்க காரணம் அந்த சிம்சா பிளஸ் பொறியாளர் மற்றும் அவரின் தேடல் ஆகும்.


இந்த பொறியாளரின் பல வருட தேடல்களுக்கு பலன் கிடைத்துவிட்டது.


Theme of the inspirational story tamil

இன்னைக்கு இந்த கதையை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்குள்ளும் ஒரு தேடல் இருக்கலாம். 


அந்த தேடல் எதற்காக வேணாலும் இருக்கலாம், படிப்புக்காக இருக்கலாம் பொருளாதார முன்னேற்றத்திற்காக இருக்கலாம் வேலைக்காக இருக்கலாம்.


அந்த தேடலில் நீங்கள் சோர்வடைந்து இருந்தாலோ, அடுத்தவர்களின் வார்த்தைகளால் கவனம் சிதறி விட்டாலோ இப்பொழுது இந்த உண்மை கதையில் இருந்து இரண்டு குறிப்புகளை மட்டும் மனதில் எடுத்துக் கொள்ளுங்கள்.


அது என்னவென்றால், உங்களிடம் எப்பொழுதும் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் ஏனெனில் தேடல் இருக்கும் இடத்தில்தான் முன்னேற்றம் இருக்கும்.


நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு அந்த தேடல் அவசியமில்லை என்று நினைக்கலாம், முட்டாள்தனமாக தோணலாம். ஆனால் அதற்காக நம் தேடலை நிறுத்தி விட அவசியம் இல்லை அவர்கள் வார்த்தையினால் உங்கள் கவனம் சிதற வேண்டாம்.


அதனால் எப்பொழுதும் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் அதனால் நீங்கள் எப்பொழுதும் ஒரு விஷயத்தை நோக்கி தேடிக்கொண்டே இருங்கள்.


இந்த inspiration story (தேடல் ஒரு லட்சியம் கதை) உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் மற்றும் இந்த கதையை உங்களுக்கு மிகவும் இருக்கும் என்பது உறுதி.


இந்த Inspiration story  உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்யுங்கள் மற்றும் உங்களுக்கு தோன்றும் கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் கூறுங்கள்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.