The Lion story in tamil
இந்த பதிவில் நாம் ஒரு சிங்கம் கதை பார்க்கப் போகிறோம். இந்த கதையானது உங்களுக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் ஒரு தத்துவத்தை உங்கள் வாழ்க்கை கூறும் என்பது உறுதி. அதனால், இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்!
கர்வம் கூடாது
ஒரு ஊருல ஒரு அழகான பெரிய கிராமம். அந்த கிராமத்திற்கு சிறிய தொலைவில் ஒரு அடர்த்தியான காடு. அந்த காட்டில் தான் எல்லா மிருகங்களும் வாழும், பெரிய மிருகம் சின்ன மிருகம் என எல்லா மிருகங்களும் இங்கு வாழ்ந்து வந்தன.
ஒரு காடு இருந்தால் கண்டிப்பாக அந்த காட்டிற்கு ராஜா இருப்பாரு, அந்த ராஜா தான் சிங்கம். இந்த சிங்கத்தை இந்த காட்டில் உள்ள அனைத்து மிருகங்களும் சிங்கராஜா சிங்கராஜா என்று தான் அழைப்பார்கள்.
சிங்கராஜா எப்போதுமே கோபக்காரர். இந்த சிங்கத்திற்கு பசி எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் எதிரில் வரும் விலங்குகளை இவர் பாய்ந்து வேட்டையாடி விடுவார்.
அதனால் இந்த காட்டில் உள்ள அனைத்து மிருகங்களும் சிங்கத்தின் முன் வருவதற்கு பயமாக இருக்கும்.
சிங்க ராஜாவின் சர்வாதிகார போக்கு இந்த காட்டில் உள்ள அனைத்து மிருகங்களுக்கு பிடிக்கவில்லை.
அதனால எல்லா மிருகங்களும் கூட்டமாக கூடி ஒரு முடிவை எடுத்தனர் அந்த முடிவை சிங்கார ராஜாவிடம் சொல்ல அனைவரும் தயங்கி தயங்கி சிங்க ராஜா இருக்கும் இடத்தை நோக்கி சென்றனர்.
இந்த அனைத்து மிருகங்களும் சிங்க குகைக்கு வெளியே நின்று சிங்க ராஜா விடம் பேசத் தொடங்கியது.
முதலில் கரடி “சிங்கராஜா உங்களிடம் நாங்கள் ஒன்றை பற்றி பேச வந்திருக்கிறோம்” என்று கூறியது.
அதற்கு சிங்கராஜா “என் முன்னால் வந்து பேசுவதற்கு உங்களுக்கு இவ்வளவு தைரியம்” என்று கோபமாக கூறியது.
உடனடியாக அதற்கு யானை “கோபப்படாதீர்கள் சிங்கராஜா நாங்கள் ஒரு செய்து கொண்டு வந்திருக்கிறோம் அதனை கோபப்படாமல் கேளுங்கள்” என்று கூறியது.
அதற்கு சிங்கராஜா “சரி” என்று கூறியது.
சிங்கார ராஜாவிடம் இருந்து அனுமதி கிடைத்ததால் அனைத்து மிருகங்களும் ராஜா “நீங்கள் இனி குகையை விட்டு உணவுக்காக வெளியே வர வேண்டிய தேவை இல்லை, நாங்கள் எங்கள் கூட்டத்தில் இருந்து ஒருவரை தினமும் உங்கள் சாப்பாட்டிற்காக அனுப்பி வைக்கிறோம்.
ஏனெனில் உங்க கோபத்தால் அனைத்து மிருகங்களும் பாதிக்கப்படுகிறது மற்றும் உங்களுக்கு இறை கிடைக்காமல் போவதால் நீங்களும் பசியாக இருப்பீர்கள்” என்று கூறியது.
சிங்கத்திற்கும் இந்த யோசனை பிடித்துப் போய் விட்டன. சிங்கம் இதற்கு சரி என்று கூறியது. அனைத்து விலங்குகளும் சந்தோசமாக இனி நம்மளுக்கு பாதிப்பு வராது என்று சிங்கராஜா இருக்கும் இடத்தை விட்டு கிளம்பினார்.
Related : how to success in our life
இந்த அனைத்து மிருகங்களும் சொன்னபடி சிங்கத்திற்கு தினமும் ஒரு கூட்டத்தில் இருந்து ஒரு விலங்கை சிங்க ராஜாவுக்கு உணவாக தந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் சொன்னபடி சிங்கத்திற்கு ஒரு விலங்கு கூட்டத்திலிருந்து ஒரு விலங்கை உணவாக அளித்தனர் கொண்டிருந்தனர்.
ஒருநாள் இதில் முயல் கூட்டத்திலிருந்து ஒரு முயலை அனுப்ப வேண்டிய கட்டாயம் வந்தது.
அந்த முயல் ஒரு சிறிய முயல் அந்த முயலின் தாய்க்கு ஒரே வருத்தம் தன் பிள்ளையை விட்டு பிரிய மனம் இயலவில்லை, ஆனாலும் இந்த அனைத்து விலங்குகளும் சிங்கத்திற்கு வாக்கு கொடுத்து விட்டனர். சரி அந்தத் தாய் முயல் தனது குட்டி முயலை அனுப்பிவைத்தது.
அந்த குட்டி முயலானது சிங்கராஜா குகையை நோக்கி துள்ளித்துள்ளி மிக சந்தோசமாக ஓடியது.
அந்த குட்டி முயல் மிக தாமதமாக சிங்கராஜா குகைக்கு சென்றது. அங்கே சென்றவுடன் சிங்கராஜா “ஏன் இவ்வளவு தாமதம் உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கூறியது.
அதற்கு அந்த குட்டி முயல் அதற்கு “ஒரு காரணம் இருக்கிறது” என்று கூறியது. சிங்கம் ராஜா “என்ன காரணம்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த சின்ன முயல் “நான் உங்களைப் போலவே ஒரு சிங்க ராஜாவே வரும் வழியில் பார்த்தேன், அவர்களிடமிருந்து தப்பித்து வர எனக்கு தாமதமாகிவிட்டது மற்றும் உங்களை எதிரி எனவும் கூறியது அந்த சிங்கம்” என்று கூறியது.
இந்த செய்தியை சிங்கராஜா கேட்டவுடன் அவருக்கு மிகவும் கோபம் வந்தது.
உடனடியாக அந்த சிங்கராஜா முயலிடம் அந்த எதிரி எங்கே இருக்கிறான் என்று கேட்டார்.
அதற்கு அந்த முயல் குட்டி வேணாம் ராஜா முதலில் என்னை சாப்பிட்டுவிட்டு பிறகு அந்த சிங்கத்தை போய் பாருங்கள் என்று கூறியது.
சிங்கராஜா உடனடியாக எனக்கு பசி எல்லாம் இல்லை முதலில் அந்த சிங்கத்தை கொன்று விட்டு உன்னை சாப்பிடுகிறேன் என்று கோபத்துடன் கூறியது.
அதற்கு அந்தக் குட்டி முயல் சரி ராஜா நான் காண்பிக்கிறேன் என்று ஒரு கிணற்றை காண்பித்தது. இந்த கிணற்றில் தான் அந்த சிங்கம் ஒளிந்திருக்கிறது என்று அந்த சிங்கராஜா விடும் குட்டி முயல் கூறியது.
அந்த சிங்கராஜா இந்த முயல் குட்டி சொன்னதை நம்பி அந்த கிணற்றை எட்டிப் பார்த்தார்.
அந்த கிணற்றில் உள்ள தண்ணீரில் இந்த சிங்கராஜா முகமானது தெரிந்தது இந்த சிங்கராஜா, அந்த சிங்கம் முகம்தான் தெரிகிறது என்று தண்ணீரை நோக்கி அதனைக் கொள்வதற்காக வேகமாக பாய்ந்தது.
இறுதியாக சிங்கம் தண்ணீருக்குள் விழுந்து தனது உயிரை விட்டது.
Related : positive thinking short stories in Tamil
Theme of the Lion story
இந்த கதையிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது? நீங்கள் ஒருவரை அழித்து விடலாம் என்று எண்ணி நீங்கள் செயல்பட்டால் அது உங்களை அளித்ததற்கு சமமாக ஆகிவிடும் என்பதை இந்தக் கதை மிக தெளிவாக கூறுகிறது.
அதனால் மற்றவர்களை அழிக்கும் எண்ணத்தில் செயல்பட்டால் நீங்களே உங்கள் வாழ்க்கையை அழைப்பதற்கு சமமாகும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு பொழுதும் கர்வம் கொண்டிட கூடாது.