இந்த பதிவில் success in our life in tamil அதாவது நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று கூறி உள்ளேன்.
நண்பர்களே, நம்முடைய வாழ்க்கையில் அனைவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும் ஆனால் அந்த லட்சியத்தை நாம் எப்படி வெற்றி அடையவேண்டும் என்று யாருக்கும் தெளிவான எண்ணம் இருக்காது அதனால் இந்த பதிவில் நாம் எப்படி நம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளேன்.
இந்த success in our life in tamil பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்து உங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான குறிப்புகள் ஆகும், அதனால் இதனை தொடர்ந்து படியுங்கள்.
How to success in our life in tamil
![]() |
How to success in our life in tamil |
#1
உங்களுக்கு ஒரு வாழ்க்கை லட்சியம் இருக்கும் அந்த லட்சியத்தை நோக்கி நீங்கள் ஒரு வழியில் செல்கிறீர்கள், ஆனால் அந்த வழியில் உங்கள் லட்சியத்தை அடைய முடியுமா? என்றும் அந்த வழி சரியான வழியா என்று முடிவெடுங்கள்.
ஏனெனில் அது தவறான மற்றும் உங்கள் லட்சியத்தை அடைவதற்கான வழி இல்லை என்றால் நீங்கள் போட்ட உழைப்பு மற்றும் நேரம் வீணாகிவிடும்.
உங்கள் லட்சியத்தை அடைய முடியாது வழிகளில் நீங்கள் செல்வதால் கடைசி வரை உங்கள் லட்சியத்தை உங்கள் வாழ்க்கையில் அடைய முடியாது. ஆதலால் உங்கள் லட்சத்திற்கான சரியான வழியை தேர்ந்தெடுத்து செல்லுங்கள்.
எடுத்துக்காட்டு : உங்கள் வீட்டிற்கு செல்வதற்கு பல வழிகள் இருக்கும் ஆனால் அதில் எந்த வழி மிக விரைவில் மற்றும் சரியாக உங்க வீட்டிற்கு செல்லும் வழியை தான் தேர்ந்தெடுப்பீர்கள். அதுபோல் உங்கள் லட்சத்திற்கான சரியான மற்றும் உங்கள் லட்சியத்தை அடைய முடியும் வழியில் செல்லுங்கள் கண்டிப்பாக உங்கள் லட்சியத்தை நீங்கள் அடைவீர்கள்.
#2
உங்கள் லட்சியத்திற்காக நீங்கள் தினமும் உழைக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் லட்சியத்தை நீங்கள் நினைத்தபடி உங்கள் வாழ்க்கையில் அடைய முடியும்.
எடுத்துக்காட்டு : நீங்களே இப்பொழுது நினைத்துப்பாருங்கள், உங்களுக்கு ஒரு 50 புத்தகங்களை படிக்க வேண்டுமென்று மேலிடத்திலிருந்து கட்டளை வருகிறது. அதற்கு உங்களுக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் ஐந்து நாட்கள் அதில் ஒரு நாளில் பத்து புத்தகங்கள் படித்தால் 5 நாட்களில் 50 புத்தகங்கள் படிக்க முடியும், நீங்கள் அந்தச் செயலை தினமும் செய்யவில்லை என்றால் இறுதி நாட்களில் உங்களால் அனைத்து புத்தங்களில் படிக்க இயலாது, அப்படி உங்களால் படிக்க முடிந்தாலும் அதன் முழு விவரத்தையும் உங்களால் உணரவும், புரிந்துகொள்ளவும் முடியாது.
அதனால் தான் உங்கள் லட்சத்திற்கான செயலை தினமும் செய்யவேண்டும் என்று கூறுகிறேன்.
#3
உங்கள் லட்சியத்தை நீங்கள் அடைய வேண்டுமென்றால் சில விஷயங்களுக்கு மறுப்பு (No) தெரிவிக்க வேண்டும்.
ஏனெனில் உங்கள் இலட்சியத்தை அடைய ஒரு செயல் இருக்கும் அப்பொழுது உங்கள் நண்பர்களோ அல்லது வேறு நபர்களோ உங்களிடம் வா நாம் சினிமாவுக்குப் போகலாம் என்று அப்பொழுது நீங்கள் சரி என்று அவர்களிடம் சொல்லிவிட்டால், அந்த நேரத்தில் உங்கள் லட்சத்திற்கான செய்ய வேண்டிய ஒரு செயல் இருந்தால் அந்த செயலை செய்ய தவறி விடுவீர்கள்.
இதனால் உங்கள் லட்சியத்தை அடைய முடியாது. அதனால் முடிந்தவரை சிலவற்றிற்கு மறுப்பு தெரிவித்து விடுங்கள் அனைத்துக்கும் மறுப்பு தெரிவிக்க வேண்டாம், தேவையற்ற செயலுக்கும் மட்டும் மறுப்புத் தெரிவியுங்கள்.
#4
நீங்கள் எப்பொழுதும் ஒரு செயலை செய்யும் முன்பு ஒரு ஐந்து வினாடிகள் சிந்தித்து செயல்படுங்கள். ஏனெனில் அந்த செயல் தான் உங்கள் வாழ்க்கையை மாற்ற கூடியதாகவும் இருக்கலாம். ஆதலால் எப்பொழுதும் சிந்தித்து செயல்படுங்கள்.
#5
உங்கள் வாழ்க்கை இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால், உங்கள் லட்சியத்திற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் அப்போதுதான் உங்கள் வாழ்க்கை லட்சியத்தை அடைய முடியும். கடுமையாக உழைத்ததால் தான் இப்பொழுது பெரும் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் என பல சாதித்த மனிதர்கள் அவர்கள் லட்சியத்தில் வெற்றியினை அடைந்திருக்கிறார்கள்.
#6
உங்கள் லட்சியத்தை அடைய முக்கியமான ஒன்று என்று சொன்னால் அது நேரம். ஏனெனில் நேரம் இல்லையென்றால் உழைப்பையும் கொடுக்க முடியாது நம் லட்சியத்தையும் அடைய முடியாது. இதற்கு தான் பெரியவர்கள்
“நேரம் பொன் போன்றது”
என்ற பழமொழியை கூறியுள்ளார்கள். ஆதலால் உங்கள் நேரத்தை தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடாதீர்கள் உங்கள் லட்சியத்தை அடைவதற்கான முயற்சியில் நேரத்தை செலவிடுங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
#7
எப்பொழுதும் உங்கள் லட்சத்திற்குள் உங்கள் குடும்பத்தையும் உங்கள் குடும்பத்திற்குள் உங்கள் லட்சியத்தையும் கொண்டு வர வேண்டாம்.
இதுபோன்று தான் இப்பொழுது பல மனிதர்கள் வெற்றி அடைந்த மனிதர்கள் வாழ்க்கையில் பின்பற்றினார்கள். எப்பொழுதும் உங்கள் குடும்பத்துக்கும் ஒரு நேரத்தை செலவிடுங்கள் அப்போதுதான் உங்கள் மனம் மற்றும் மூளையானது மகிழ்ச்சியாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆதனால் லட்சியத்திற்காக குடும்பத்தை மறந்து விடாதீர்கள்.
முடிவுரை
இந்த how to success in our life in tamil பதிவு உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த success in our life in tamil பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் கண்டிப்பாக செய்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறலாம்.