வணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் Positive thinking short stories tamil மொழியில் பார்க்கப்போகிறோம்.
இந்தக் கதையில் நம் குறைகளை மறந்து விட்டு எப்படி positive thinking செய்வது என்பதை கற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
Positive thinking short stories in tamil
பானையின் குறை
ஒரு ஊரில் ஒரு குயவர் (பானை செய்பவர்) இருந்தார். அவருக்கு பானைகள் செய்வதுதான் வேலை. அவர் ஒருநாள் தன்னுடைய வீட்டில் தனது தேவைக்காக இரண்டு பானை செய்தார்.
அந்த இரண்டு பானைகளுமே பெரிதாக இருந்தது. இந்த பானைகளை அந்தக் குயவர் ஒரு தடிமனான குச்சிகளில் இரண்டு பானைகளையும் இரு பக்கத்தில் கயரில் கட்டி ஆற்றில் சென்று தண்ணீர் எடுத்து வர பயன்படுத்தி கொண்டிருந்தார்.
சிறிது வாரம் அந்த குயவர் இப்படியே இரண்டு பானைகளில் தண்ணீர் எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு தண்ணீர் எடுத்து கொண்டிருந்தார்.
அதன் பிறகு, அவர் செய்த இரண்டு பானைகளில் ஒரு பானையில் விரிசல் ஏற்பட்டுவிட்டது.
இந்த குயவர் ஆற்றிலிருந்து இரண்டு பானைகளையும் முழு அளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருவான். ஆனால் அந்த விரிசல் பானையில் உள்ள தண்ணீர் கால் அளவு தான் இருக்கும். அந்தக் குயவர் ஏன் இந்தப் பாணியில் மட்டும் தண்ணீர் குறைகிறது என்று சிந்தித்து பார்த்தார். அதன் பிறகு அந்த பானையிலுள்ள விரிசலை அந்தக் குயவர் கண்டு பிடித்து விட்டார்.
ஆனாலும் அந்த விரிசல் விழுந்த பானையை அவர் மாற்றவில்லை. இந்த இரண்டு பாலையில் தான் தினமும் தண்ணீர் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருவார்.
அந்த இரண்டு பானைகளும் இரவு வேளையில் பேசிக்கொள்ளும். அப்பொழுது அந்த விரிசல் விழுந்த பானையைப் பார்த்து நல்ல பானை நான் ஆற்றில் எடுத்து தண்ணீரை அப்படியே முழுமையாக கொண்டு வருகிறேன். ஆனால், நீ கால் அளவு தண்ணீர் தான் கொண்டு வருகிறாய் என்று நல்ல பானை, விரிசல் விழுந்த பானையைப் பார்த்து கிண்டல் செய்தது.
விரிசல் விழுந்த பானைக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ஏன் நம்முடைய பானை விரிசல் விழுந்து விட்டது என்று தெரிந்தாலும், அந்த குயவர் ஏன் நம்மளை உபயோகிக்கிறார்? ஏன் வேற பானை மாற்றவில்லை? என்று சந்தேகம் எழுந்தது.
சரி நாம் அந்தக் குயவர் இடமே கேட்டு விடலாம் என்று முடிவு செய்தது அந்த விரிசல் பானை.
ஒருநாள் காலையில் அந்த குயவர் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்திருந்தார். அப்பொழுது அந்த விரிசல் பானை ஏன் என்னை இன்னும் உபயோகிக்கிறீர்கள்? நான்தான் விரிசல் அடைந்துவிட்டேன், என்னை தூக்கி போட்டு வேறொன்று பானை செய்து விடலாமே என்று கேட்டது.
![]() |
Positive thinking short stories in tamil |
அதற்கு அந்த குயவர் நாம் வந்த பாதையை திரும்பி பார் என்று சொன்னார். அதில் இரண்டு பக்கமும் செடிகள் முளைத்து இருக்கும் அந்த செடிகள் எல்லாம் யாரால் வளர்ந்தது என்று தெரியுமா? என்று கேட்டார்.
அதற்கு அந்த விரிசல் பானை தெரியவில்லை என்று சொன்னது. அதற்கு அந்தக் குயவர் உன்னால் தான் வளர்ந்தது என்று சொன்னார்.
அந்தக் குயவர் அந்த பானையை பார்த்து நான் உன் விரிசலை பார்த்தவுடன் தூக்கி போடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், நான் அடுத்த நாள் சென்று பார்க்கும் பொழுது தான் அங்கு வரும் பாதையில் செடிகள் இருக்கிறது என்பதை நன்றாக கவனித்தேன். அந்த செடிகள் எல்லாம் சரியாக வளராமல் இருக்கிறது. அதனால் உன் விரிசல் குறையை வைத்து அந்த செடிகள் எல்லாம் வளர வைத்தேன் என்று கூறினார்.
உன் விரிசலில் இருந்து விழும் தண்ணீர் மூலம் அந்த செடிகள் வளர்ந்தது என்று கூறினார் அந்தக் குயவர்.
உன் விரிசல் எனக்கு பயனுள்ளதாக தான் இருந்தது உன் குறையையும் நான் பயனுள்ளதாக மாற்றி கொண்டேன் என்று அந்த விரிசல் பானையைப் பார்த்து கூறினார்.
இத்துடன் இந்த கதை முடிகிறது.
Theme of the Positive thinking short stories in tamil
இந்தக் கதையிலிருந்து நம்மளுக்கு என்ன தெரிய வருகிறது?
![]() |
Positive thinking short stories in tamil |
இந்த பானையில் குறை இல்லை என்றால் அந்த செடிகள் எல்லாம் வளர்ந்திருக்காது. அது போன்றுதான் நம் வாழ்க்கையில் கஷ்டம், நஷ்டம், குறைகள், போராட்டங்கள் இல்லை என்றால் நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி செல்லாது.
ஒரு மனிதனாக பிறந்தால் அனைவருக்கும் குறைகள் இருக்கும். அந்த குறைகளை நாம் எப்படி பயனுள்ளதாக மாற்றுகிறோம் என்பதில் தான் அவன் வாழ்க்கை இருக்கிறது.
அதனால் எப்பொழுதும் உங்கள் வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் மற்றும் குறைகளை எண்ணி வருந்தாதீர்கள் அதனை எப்படி மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக மாற்றும் படி நீங்கள் செயல்படுங்கள்.
இனிமேல் உங்கள் குறையை நீங்கள் குறையாக கருத மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அந்த குறையை உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு அடிக்கல் என்று நம்புங்கள் மற்றும் வாழ்க்கையை மாற்றுங்கள்.
Also read : success tips in tamil
Also read : time wasting habits
இந்த Positive thinking short stories in tamil (பானையின் குறை) கதை உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கதையில் உங்களுக்கு வேறு சில கருத்துக்கள் தோன்றினால் கீழே கமென்ட் பாக்ஸில் கூறுங்கள்.
இந்த கதையை படித்த பின் உங்கள் குறையை பார்த்து கவலைப்பட மாட்டீர்கள் மற்றும் அதனை பயனுள்ளதாக மாற்றி, உங்கள் வாழ்க்கையில் வெற்றியடைவீர்கள் என்று நம்புகிறேன்.
அருமையான வாழ்வியல் உண்மையை விளக்கியது கதை. நன்றி நண்பரே...
பதிலளிநீக்கு- கில்லர்ஜி