Type Here to Get Search Results !

MG Muthu success story in Tamil - MGM group owner

0

MG Muthu வின் வாழ்க்கை கதை


ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து சென்னை துறைமுகத்தில் தினசரி கூலியாக வேலை பார்த்து தன் உழைப்பால் இப்பொழுது 2500 கோடி சொத்து மதிப்பை சேர்த்த மாமனிதனின் வாழ்க்கை கதையை பற்றி பார்ப்போம்.

MG Muthu பிறப்பு

எம்ஜி முத்து 1935 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தார்.இவர் பிறந்த போதிலிருந்தே அவருக்கு நிறைய கஷ்டம். எம்ஜி முத்து பிறக்கும் பொழுதே அவர் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது? என்றுதான் இருந்தது. இதனை அவர் நினைத்து என்னுடைய வறுமையிலிருந்து எப்படியாவது மாற்றம் வர வேண்டும் என்று சிறுவயதில் இருந்து என்ஜி முத்துக்கு எண்ணம் ஏற்பட்டது. 

MG Muthu பள்ளி வாழ்க்கை

எம்ஜி முத்து மற்ற மாணவர்கள் பள்ளிக்கு வருவதை கண்டதும் இவருக்கும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று ஆர்வம் வந்தது. இவரும் அதே போல் பள்ளியில் சேர்ந்தான் ஆனால் சில வாரங்களில் இவர் பள்ளியை நிறுத்தி விட்டார். ஏனென்றால் இவருக்கு வந்த வறுமை ஆகும். அதன்பிறகு எம்ஜி முத்து தந்தையுடன் சேர்ந்து வயலில் வறுமையைப் போக்க வேலை பார்த்தார். இப்படியே அவர் வாழ்க்கை போய்கொண்டு இருந்தது. 

MG Muthu வாழ்க்கை பயணம் மற்று அவர் நிறுவிய நிறுவனங்கள்

அதன் பிறகு 1952 ஆம் ஆண்டு சென்னைக்கு சென்றார். அங்கு MG Muthu சென்னை துறைமுகத்தில் தினசரி கூலியாக வேலை செய்தார். இவர் சென்னை துறைமுகத்தில் பத்து வருடம்  வேலை பார்த்தார். இந்த பத்து வருடத்தில் அவர் சேர்த்த பணத்தை வைத்து ஒரு சிறிய தொழில் தொடங்கினார் அதுதான் MGM logistics.

 அவர் சென்னைக்கு வந்து பத்து வருடம் ஆகி விட்டதால் இவருக்கு தெரிந்த சில நண்பர்கள் மூலமாக MGM logistics க்கு சில order வந்தது. அந்த ஆர்டர்களை பெற்று கொண்டு, இவர் மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் கடுமையாகவும் உழைத்தார். இவர் உண்மை மற்றும் நேர்மையை கண்ட பல பெரிய நிறுவனங்கள் இவருக்கு ஆர்டர் கொடுத்தது. இதனை MG Muthu சரியாக பயன்படுத்தி அவரின் உழைப்பால் அவர் நிறுவனத்தை MGM GROUP ஆக மாற்றினார்.

 MG Muthu சிறுவயதில் நினைத்தபடியே அவர் தன் வறுமையும் நீக்கினார்.
அதன்பிறகு இவர் தொட்டதெல்லாம் வெற்றி என்று தான் சொல்லலாம். இவர் இதுவரை கண்டிராத உயர்ந்த இடத்தைப் பிடித்தார். அதன்பிறகு இவர் MGM GROUP, MGM theme park, MGM dizee world, MGM hospitality, MGM minerals என்ற நிறுவனத்தை நிறுவினார்.

MG Muthu இறப்பு

அதன்பிறகே இவர் மே 24 ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு உலகை விட்டு மறைந்தார். MG Muthu மறைந்த பிறகு இவர் நிறுவிய அனைத்து நிறுவனங்களையும் MG Anand மற்றும் MG Maran அவர்கள் இப்பொழுது நிர்வகித்து வருகிறார்கள்.

எம்ஜி முத்து பற்றிய சிறிய குறிப்பு


பெயர் : MG Muthu
பிறப்பு : 1935 ஆம் ஆண்டு
இறப்பு : மே 24 ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு.
இவர் நிறுவிய நிறுவனங்கள் : MGM GROUP, MGM theme park, MGM dizee world, MGM hospitality, MGM minerals. 
இவர் பிள்ளைகள் : MGM Anand, MGM Maran

Motivation from MG Muthu

தனது வாழ்க்கையை உள்ள வறுமை கண்டு அஞ்சாமல் தனது உழைப்பாலும் நேர்மைனாலும் முன்னேறி காட்டிய MG Muthu போன்று நாமும் நம் வாழ்க்கையில் வறுமை மற்றும் துன்பங்களை கண்டு அஞ்சாமல் எப்பொழுதும் நம் உழைப்பை கொடுத்துக் கொண்டே இருந்தால் ஒரு நாள் அல்லது ஒரு நாள் நீங்கள் கொடுத்த உழைப்பிற்கு தக்க வெற்றியைத் தேடி வரும் என்பதற்கு உதாரணம் MG Muthu.
அதனால், 
“நீங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருங்கள்”.

Post a Comment

0 Comments