உங்கள் வாழ்க்கையை மாற்றும் செயல்கள் - success tips in tamil

Motivation and success tips in tamil


இந்த வாழ்க்கை எங்கு போகுது? என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் இதுவரை நீங்கள் கண்ட கஷ்டம், நஷ்டம், தோல்வி, வெற்றி, அவமானம் என எவையும் உங்கள் பிற்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

Motivation and succes tips in Tamil
Motivation and succes tips in Tamil 

விளக்கம்

இந்த நிமிடம் தான் உங்கள் வாழ்க்கையை மாற்றும் நேரம் ஆகும். இந்த நிமிடத்தை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் உங்கள் எதிர்காலமே இருக்கிறது. நீங்கள் இதற்கு முன்னாடி சோம்பேறி ஆகவும், ஒதுக்கப்பட்டவர் ஆகவும், தோல்வி கண்டவர் ஆகவும் இருக்கலாம் ஆனால் இது எதுவுமே உங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தின் தீர்வாக இருக்காது. நீங்கள் இப்பொழுது எடுக்கும் முடிவுகள்தான் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்று நினைத்து சிந்தியுங்கள்.

உங்கள் மனதில் என் வாழ்க்கை எதை நோக்கிப் போவது? என்று நினைத்தீர்களா, அப்பொழுது உங்கள் வாழ்க்கை உங்களுக்கு பிடித்த படி திருப்தியாக வாழ வில்லை என்று தான் அர்த்தம் அதற்காகதான் இந்த பதிவில் நம்முடைய வாழ்க்கையை மாற்றுவதற்கான வழிகளை கூறி உள்ளேன். ஆனால் பலருக்கும் தன் வாழ்க்கையை சட்டென்று மாற்றி விட கடினமாக தான் இருக்கும், ஆனால் இந்த கஷ்டத்தை கடந்தால்தான் உங்களுக்கு அற்புதமான விஷயங்கள் எல்லாம் இருக்கிறது என்பதை நினைத்துக் கொண்டு இதனை படியுங்கள்.

மறந்து விடுங்கள்

நீங்கள் இதுவரை வாழ்ந்த பழைய வாழ்க்கையை மறந்து விடுங்கள். இதுவரைக்கும் நீங்கள் எப்படி வேணாலும் வாழ்ந்திருக்கலாம், அதனால் அந்த பழைய வாழ்க்கை எல்லாம் மறந்துவிட்டு இனிமேல் நீங்கள் எப்படி சரியாக வாழவேண்டும் என்று தெளிவான முடிவெடுங்கள்.

தன்னம்பிக்கை

Motivation and succes tips in Tamil
Motivation and succes tips in Tamil 

எப்பொழுதும் உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வையுங்கள் ஏனெனில் தன்னம்பிக்கை இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் உங்களால் முடிக்க இயலாது. அதன் பிறகு நீங்கள் ஒரு இலக்கை தேர்ந்தெடுத்து. அதனை சிறிய சிறிய இலக்காக பிரித்து வைத்து அதனை அடைய முயற்சி செய்யுங்கள்.

ஏனெனில் நீங்கள் எடுத்த உடன் அம்பானி ஆக வேண்டும் என்றால் யாராலும் முடியாது என்று நினையுங்கள். அதனால் உங்கள் வாழ்க்கை இலட்சியத்தை சிறிய சிறிய தாக பிரித்து வைத்து வெற்றி காணுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

முதலீடு

உங்கள் எதிர்காலத்தை நோக்கி முதலீடு செய்யுங்கள் உங்கள் பணம், உழைப்பு, நேரம் என அனைத்தையும் உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யுங்கள். இப்பொழுது உங்களிடம் பணம், செல்வாக்கு, உழைப்பு என அனைத்தும் இருக்கும், ஆனால் இது அனைத்தும் எந்த நேரத்திலும் போகலாம். அதனால் இதனை உங்கள் எதிர்காலத்திற்காக இப்பொழுது முதல் முதலீடு செய்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும் என்பது உறுதி. 

சில வேளை உங்கள் மனதிற்கு ஒத்துப் போகாமல் இருக்கலாம் உங்களுக்கு சொகுசாக வாழ வேண்டும் என்று உங்களுக்கு தோன்றும், ஆனால் இந்த செயல்களை செய்த பிறகு கண்டிப்பாக நீங்கள் சொகுசாக தான் வாழப் போகிறீர்கள், அதனால் உங்கள் சந்தோஷத்திற்காக நீங்கள் உழைப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்பதை நினைத்து நீங்கள் உழையுங்கள். 

கஷ்டப்படும் காலத்தில் சொகுசாக வாழ வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கண்டிப்பாக கடைசிவரையும் கஷ்டத்தில் தான் வாழ்வீர்கள். அதனால் கஷ்டத்தில் வாழும் போது உங்கள் கஷ்டத்துடன் வாழ்ந்து அதன் பிறகு உங்கள் சொகுசு வாழ்க்கை உங்களை அழைக்கும்.

வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்

Motivation and succes tips in Tamil
Motivation and succes tips in Tamil 

நீங்கள் எப்பொழுதும் உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுக்காக வாழாதீர்கள். எப்போதும் உங்களுக்காக வாழுங்கள், அதாவது மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு மட்டும் செயல்படாதீர்கள் உங்கள் மனதிற்கு ஒன்று தோன்றும் அதை நீங்கள் உண்மையாக, நேர்மையாக செய்தால் கண்டிப்பாக நீங்கள் கஷ்டம் காலத்திலிருந்து ஒளிமயமான காலத்தை நீங்கள் பார்ப்பீர்கள். 

அப்படி நீங்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்டு நீங்கள் செயல்பட்டால் நீங்கள் கஷ்டப்படும் காலத்தில் அவர்கள் கஷ்டப்பட மாட்டார்கள் என்று நினையுங்கள். ஆதனால் உங்கள் மனதில் தோன்றும்  எண்ணங்களை  உங்களுக்கு  அதனை பிடித்து முழு ஈடுபாடுடன் செய்யுங்கள்.

மனக்கசப்பு

இதன் அனைத்தையும் நீங்கள் செய்யும்பொழுது உங்களுக்கு ஏதாவது மனக்கசப்பு வந்தால் நீங்கள் ஒன்றை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள், இந்த கஷ்ட நாட்கள் தான் பிற்காலத்தில் நம்முடைய வாழ்க்கையை ஒளிமயமாக்க போகிறது என்று நினைத்து செயல்படுங்கள் வெற்றி காணுங்கள். அப்படி நீங்கள் நினைத்து செயல்படவில்லை என்றால் கஷ்டம் காலம் கஷ்டம் காலமாக தான் இருக்கும் என்பது உறுதி. 

அதனால் கஷ்டப்படும் காலத்தில் கஷ்டப்பட்டு உழையுங்கள் வாழும் காலத்தில் இனிமையாக வாழுங்கள்.

Post a Comment

0 Comments